இந்தியா

இந்தியாவில் திருமணமாகாமல், தனியாக வாழ்வதை விரும்பும் 81% பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும் திருமணம் என்பது புனிதமானது என்றும் காலங்காலமாக இந்தியாவில் கூறப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் காலத்தில் பெண்களுக்கு திருமணம் செய்வதை ஒரு கடமையாகவே கருதி வருகின்றனர் என்பதும் பெண் குழந்தைகளை 18 முதல் 22 வயதுக்குள் பெரும்பாலான பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க விரும்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு திருமணத்தின் மீதான பற்று குறைந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. சமிபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 81% பெண்கள் திருமணமாகாமல் தனித்து இருப்பதை விரும்புவதாக கூறி இருப்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண்கள் தற்போது நல்ல கல்வி அறிவு பெற்று நல்ல வேலையில் இருப்பதால் பொருளாதார ரீதியில் யாரையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் திருமணம் என்ற பந்தத்தில் சிக்கி ஒருவருக்கு கீழ் வாழ்வதை விரும்பாமல் தனித்து இருப்பதே அல்லது தங்களுக்கு விருப்பமான துணைவர் கிடைக்கும் வரை காத்திருக்க விரும்புகின்றனர் என்பது தான் அந்த ஆய்வின் முடிவாக உள்ளது.

உன்னில் சரிபாதியை நீ எப்போது தேட போகிறாய்? என்று பெற்றோர் கேட்கும் கேள்விக்கு பல பெண்கள் நானே முழுமையாக தான் இருக்கிறேன், என்னில் பாதி எல்லாம் கிடையாது என்று பதில் அளிக்கும் அளவுக்கு பெண்களுக்கு தற்போது மெச்சூரிட்டி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான பெண்கள் டேட்டிங் செய்வதை விரும்புகின்றனர் என்றும் ஒருவரை பிடித்து அவர் நமக்கு சரிப்பட்டு வருவார் என்று தெரிந்தால் மட்டுமே திருமணம் என்ற பந்தத்தில் நுழைய விரும்புகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே வருங்காலத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் என்பது குறைந்து, பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளும் முறைதான் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய பெண்கள் பெரும்பாலும் திருமண பந்தத்தில் நுழையாமல் தனித்து இருக்கவே விரும்புவதாக கூறப்பட்டிருக்கும் ஆய்வு முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version