உலகம்

ஒரே இரவில் 300ல் இருந்து 8000 ஃபாலோயர்கள்: டுவிட்டரில் நடந்த மேஜிக்!

Published

on

பல ஆண்டுகளாக டுவிட்டர் கணக்கு வைத்திருந்த ஒருவர் 300 ஃபாலோயர்கள் மட்டுமே வைத்து இருந்த நிலையில் திடீரென ஒரே இரவில் 8000 ஃபாலோயர்கள் தனக்கு வந்தது எப்படி என்பது பெரும் ஆச்சரியமாக இருப்பதாகவும் குறிப்பாக அந்த 8000ல் ஒருவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப் க்ராவன் என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ட்விட்டரில் ஒரு கணக்கை ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் பெரிதாக டுவிட் எதுவும் பதிவு செய்ததே கிடையாது. அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு வெறும் 300 ஃபாலோயர்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென இன்று காலையில் எழுந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பார்த்தபோது 8000 ஃபாலோயர்கள் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது? தூங்கும் நேரத்தில் கடவுள் புரிந்த அருளா? என அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் டுவிட்டர் அதிகாரிகள் இது குறித்து கூறிய போது ஏதாவது டெக்னிக்கல் பிரச்சனையாக இருக்கும் என்றும், இது எப்படி நிகழ்ந்தது என்று எங்களுக்கே தெரியவில்லை என்றும் அவர்கள் ஆச்சரியத்துடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version