தமிழ்நாடு

800 செவிலியர்கள் திடீர் பணிநீக்கம்: போராட்டம் செய்ததால் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

Published

on

கொரோனா தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 3200 செவிலியர்கள் 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் இன்று காலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நடத்திய 800 செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் 3200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 2400 செவிலியர்கள் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது

இதனை அடுத்து மீதமுள்ள 800 செவிலியர்கள் நிதி பற்றாக்குறை காரணமாக மார்ச் இறுதியில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் மாருதி 800 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டத்தை நிறுத்தும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் டிஎம்எஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version