தமிழ்நாடு

ஒரே மாவட்டத்தில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா!

Published

on

ஒரே மாவட்டத்தில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உள்பட 11 பேர் பேர்களூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 2-ம் தேதியிலிருந்தே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன. ஏற்கனவே நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 8 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர்களுக்கும், ஆவூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 3 பேர்களுக்கும் ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றிய ஏற்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பள்ளிகள் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்லூரிகள் திறந்ததில் இருந்து தொடர்ந்து நாளுக்கு நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் விரைவில் தமிழக அரசு அதிரடி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version