இந்தியா

11 நாட்களில் 8 நாட்கள் வங்கி விடுமுறை: உஷாராகும் வாடிக்கையாளர்கள்!

Published

on

வங்கிகளுக்கு 11 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக வரவிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மார்ச் 27ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான 11 நாட்களில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளன. மார்ச் 27ஆம் தேதி 4வது சனிக்கிழமை, மார்ச் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 29 ஆம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 31ஆம் தேதி நிதி ஆண்டின் கடைசி நாள், ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 4ஆம் தேதி ஞாயிறு, ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நாள் என 8 நாட்கள் கிட்டத்தட்ட தொடர்ந்து விடுமுறை நாட்களாக அமைந்துள்ளன.

எனவே வங்கி காசோலைகள், டிமாண்ட் டிராஃப்ட் உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் ஏடிஎம்களில் பணம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே பணத்தை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுமாறு அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த 8 நாட்கள் விடுமுறை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் இல்லை என்பதும் தமிழகத்தில் ஹோலி பண்டிகை உள்ளிட்ட ஒருசில நாட்களுக்கு விடுமுறை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version