உலகம்

’Summer Games’க்கு ஆபத்து: ரத்தாகிறதா ஒலிம்பிக் போட்டிகள்!

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் செல்வதற்கு தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலிருந்து 112 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள டோக்கியோவில் உள்ள ஓட்டல் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஓட்டலில் தான் பிரேசில் நாட்டின் வீரர்கள் தங்க திட்டமிட்டுருந்தனர் என்பதும், வீரர்களின் வருகைக்கு முன் ஓட்டல் ஊழியர்களுக்கு நடந்த சோதனையில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் டோக்கியோவில் உள்ள ஓட்டல் ஊழியர்களுக்கு கொரோனா என்பதால் சற்று பதட்டம் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லாத ஊழியர்கள் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் விளையாட்டுத்துறை அறிவித்துள்ள நிலையில் தற்போது ஓட்டல் ஊழியர்களுக்கு 8 பேருக்கு கொரோனா என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜப்பான் நாட்டின் விளையாட்டு துறை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version