இந்தியா

7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 15 நாட்களில் உயத்தி அறிவிக்க வாய்ப்பு!

Published

on

மத்திய அரசு அடுத்த 15 நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாக மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, மார்ச் 1-ம் தேதி கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் அரசு ஊழியர்கள் பாதிக்காமல் இருக்க வழங்கப்படுவதே அகவிலைப்படியாகும்.

கடைசியாக இந்த அகவிலைப்படி சென்ற செப்டம்பர் மாதம் 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்போது மீண்டும் 4 சதவிகிதம் உயர்த்தி 42 சதவிகிதம் அகவிலைப்படி என அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.

இப்படி அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்

மேலும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றங்கள் கொண்டு வர புதிய கமிஷன் அமைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அது கண்டிப்பாக 8வது சம்பள கமிஷனாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version