இந்தியா

வீட்டு வாடகைப்படி HRA ’கட்’ ஆகிறதா? அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது HRA என்ற வீட்டு வாடகைப்படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலருக்கு இனி வீட்டு வாடகை படி ’கட்’ ஆகும் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் வீட்டு வாடகைப்படி குறித்த சில புதுப்பிக்கப்பட்ட விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரே வீட்டில் வசிக்கும் இருவரில் ஒருவருக்கு வீட்டு வாடகை படி கிடையாது என்றும் அதே போல் அரசு வழங்கிய வீட்டில் இருப்பவர்களுக்கும் வீட்டு வாடகைப்படி வழங்குவது குறித்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டு வாடகைப்படி என்ற HRA என்பது மூன்று விதமாக பிரிக்கப்படும். 50 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 24 சதவீத வீட்டு வாடகைப்படியும், 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு 16% வீட்டு விட்டு வாடகைப்படியும், 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத வீட்டு வாடகைப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வீட்டு வாடகைப்படி வழங்குவதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு ஊழியர் மற்றொரு அரசு ஊழியர் உடன் இணைந்து ஒரே வீட்டில் தங்கினால் அதில் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் என்பது புதிய விதியாக உள்ளது.

அதாவது கணவன் மனைவி ஆகிய இருவரும் அல்லது தந்தை – மகன், தந்தை – மகள் ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்தால் யாராவது ஒருவருக்கு தான் வீட்டு வாடகைப்படி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அரசு ஊழியரின் மனைவிக்கு வீட்டு வாடகைப்படி இருந்து ஆனால் இருவரும் வெவ்வேறு வீடுகளில் தங்கினால் அவர்கள் எந்தெந்த பகுதிகள் தங்குகிறார்கள் என்பதைப் பொறுத்து தனித்தனி வீட்டு வாடகை படி கொடுக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் புதிய விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி இருவரும் அரசு ஊழியர்கள் ஆக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு தான் வீட்டு வாடகைப்படி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version