இந்தியா

இந்தியாவில் 75 லட்சம் பேர் வேலையிழப்பு: சி.எம்.ஐ.இ அமைப்பு தகவல்

Published

on

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சிறு தொழில் செய்பவர்கள் தற்போதைக்கு தொழிலை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மிகப் பெரிய அளவில் வருமானம் அவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் அலுவலகங்களில் வேலை செய்பவர்களின் பலரது வேலை கேள்விக்குறியாகி உள்ளது என்றும். பலர் வேலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சி.எம்.ஐ.இ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் 75 லட்சம் பேர் வேலை இழப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பலர் வேலை உள்ளதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேலை இழந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version