உலகம்

700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தலா? அதிர்ச்சி காரணம்..1

Published

on

கனடாவில் படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில் உள்ள 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படிப்பு விசாவில் நாட்டிற்குள் வந்த நிலையில் அவர்கள் கொண்டு வந்த கடிதங்கள் தவறானவை என கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாடு கடத்தப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது போலியான சலுகை கடிதங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தங்களுக்கு ஆவணத்தை வழங்கிய நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் தாங்கள் மோசடிக்கு ஆளானதாகவும் தற்போது இந்த நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின்படி 700 மாணவர்கள் கல்வி சேவைக்காக படிப்பு விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் படிப்பதற்காக ஒவ்வொரு மாணவரும் ரூபாய் 16 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளனர் என்றும் விமான டிக்கெட் மற்றும் பிற செலவுகள் மாணவர்களை சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடாவுக்கு வந்த பிறகு அவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்வது மற்றும் சலுகை கடிதங்களை விநியோகம் செய்வது வரை அந்த ஏஜென்சி உதவி செய்துள்ளது. ஆனால் அந்த சலுகை கடிதங்கள் தற்போது பொய்யானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் தற்போது சிக்கலில் உள்ளனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் சிலர் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பையும் பெற்றிருப்பதாகவும் ஒரு சிலர் நிரந்தர விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் தான் இந்த மோசடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏஜென்சி மூலம் மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பித்த நிலையில் ஏஜென்சி அவர்களின் கல்வி சான்றிதழ் மற்றும் நிதி ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும் அவ்வாறு வழங்கிய போது தான் சில போலி சலுகை கடிதங்களை இணைத்துள்ளதாகவும் இதனால் மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மாணவர்களின் சலுகை கழகங்கள் போலியாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் திறமையால் படித்துள்ளதால் அந்த படிப்பிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஏஜென்சியால் ஏமாற்றப்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கனடாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலியான சலுகை கடிதம் மூலம் படித்த மாணவர்களின் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களை விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மாணவர்கள் படிப்பதற்காக செல்லும்போது ஜிஐசி என்ற முதலீட்டு சான்றிதழை பெற வேண்டும் இந்த ஆவணங்களின் அடிப்படையில் தான் மாணவர்களின் விசாக்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அவர்கள் தூதரகத்தால் விசா வழங்கப்படும் போது பயோமெட்ரிக் என்பதிலும் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தூதரக அதிகாரிகள் சலுகை கடிதங்களை பெற்று அந்த மாணவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பார்கள்.

இந்த நிலையில் போலி கடிதங்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கனடா தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல்கலைக்கழகங்கள் சலுகை கடிதங்கள் பொறுத்தவரை மிகவும் அரிதாகவே ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சலுகை கடிதங்கள் பெரிய அளவில் ஆய்வு செய்யாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்வதால் தான் இப்படி ஒரு தவறு நடந்துள்ளது என்றும் இனி ஒவ்வொரு மாணவரின் சலுகை கடிதங்களை தூதரக மட்டத்தில் விசாரணை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்ளும் 700 மாணவர்கள் ஆதரவாக கனடாவில் உள்ள Friends of Canada & India Foundation என்ற அமைப்பு முன்வந்துள்ளதாகவும் இது குறித்து கனடிய அதிகாரிகளுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகவும் நாடு கடத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version