இந்தியா

மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை.. மத்திய அரசு அதிரடி!

Published

on

கொரோனாவுக்கு எதிராகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

எனவே, மத்திய அரசு மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து அவசரமாக இந்தியத் தொற்று நோய் சட்டம் 1897-ல் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ள மத்திய அரசு, மருத்துவரைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கிய பிறகு, இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version