உலகம்

இனிமேல் வேலையே வேண்டாம்.. கூகுளில் இருந்து வெளியேற்றப்பட்ட 7 ஊழியர்களின் அதிரடி முடிவு..!

Published

on

கூகுள் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அடுத்த வேலையை தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது விவரங்களை குறிப்பிட்டு தங்களுக்கு வேலை கிடைக்க உதவும்படி கேட்டு வருகின்றனர். வேலைநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏழு ஊழியர்கள் இனிமேல் யாரிடமும் நாங்கள் வேலை செய்ய தயாராக இல்லை என்றும் சொந்த தொழில் செய்யப் போகிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்தவர்களில் ஒருவர் கிர்க் என்பவர். இந்நிறுவனத்தால் 12000 ஊழியர்களில் வெளியேற்றப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதும் வேலை போய்விட்டது என்று தெரிந்தவுடன் முதல் ஐந்து நிமிடம் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்றும் ஆனால் அதன் பிறகு என்னால் எனது குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த கட்ட வேலையை செய்ய தொடங்கினேன் என்றும் தெரிவித்தார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட சிலரை அணுகினேன் என்றும் அவர்களில் ஆறு பேர் எனது முடிவுக்கு ஒத்துழைத்தார்கள் என்றும் எனவே நாங்கள் ஏழு பேரும் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியுள்ளோம் என்றும் அவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ஒரு தொடக்கம் தான் என்றும் மற்ற ஸ்டார்ட் அப் போலவே எங்கள் நிறுவனமும் வளர வாய்ப்பு இருக்கிறது என்றும் கடுமையான உழைப்பு மற்றும் எங்கள் திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடின உழைப்பும் நாங்கள் எடுக்கும் முடிவுகளும் கண்டிப்பாக வாழ்க்கையை முன்னேற்றும் என்று நம்பிக்கையை கொண்டிருக்கின்றேன் என்றும் அந்த நம்பிக்கையில் சிறிதளவு சந்தேகமில்லாமல் திறமையாக உழைத்தால் நிச்சயம் எங்கள் அனுபவம் எங்கள் நிறுவனத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறு மிகச்சிறந்த முன்னாள் கூகுள் ஊழியர்களுடன் நான் இணைந்துள்ளேன் என்றும் நாங்கள் NYC மற்றும் SF இல் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றோம் என்றும் இது மோசமான முடிவாக இருக்கலாம் என்று சிலர் கருதினாலும் எங்களுக்கு உற்சாகமான மற்றும் சவாலான பணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த ஏழு முன்னாள் கூகுள் ஊழியர்களின் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் நிச்சயம் வளர்ச்சி அடையும் என்று பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version