இந்தியா

3 வேளாண் சட்டங்கள் ரத்தாகிறதா? ஜனாதிபதியை சந்திக்கும் 7 கட்சி தலைவர்கள்!

Published

on

சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும், கடந்த 6 மாதத்திற்கு மேலாக டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது என்பதும் பலகட்ட பேச்சுவார்த்தை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்றபோதும், உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் போராட்டம் நீண்டுகொண்டே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வேளாண் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று மத்திய அரசு உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதியிடம் 7 எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர். பெகாசஸ் செயலின் ஒட்டுக்கேட்பு, வேளாண் சட்டங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஜனாதிபதியுடன் அறிவுறுத்துமாறு அவர்கள் கூறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பையும் நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளை மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசியல் சட்டம் அரசியல் சட்டத்தை கடைபிடிக்குமாறு மத்திய அரசுக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள ஏழு அரசியல் கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பிற்கு பின் மூன்று வேளாண் மசோதா ரத்தாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending

Exit mobile version