சினிமா செய்திகள்

வேற லெவலில் ‘நாங்க வேற மாறி’ பாடல்: ஒரு கோடியை நெருங்கிய பார்வையாளர் எண்ணிக்கை!

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ’நாங்க வேற மாதிரி’ பாடல் நேற்று இரவு வெளியான நிலையில் 18 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழுவினர் செல்ல உள்ளனர். ரஷ்யாவில் 5 நாட்கள் அதிரடி சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரவு 10.45 மணிக்கு ’வலிமை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ’நாங்க வேற மாதிரி’ பாடல் வெளியானது.

யுவன் சங்கர் ராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் அனுராக் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்களில் விடிய விடிய இந்த பாடல் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிகக் குறுகிய நேரத்தில் 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம் பார்வையாளர்களை பெற்ற இந்த பாடல், தற்போது 18 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இன்னும் 6 மணி நேரத்தில் அதாவது 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை இந்த பாடல் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version