சினிமா செய்திகள்

இந்தியில் ரீமேக்காகும் 7ஜி ரெயின்போ காலனி!

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி, இன்றளவும் இளைஞர்களின் விருப்பப் படமாக திகழ்கிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒடியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இந்தியில் இதுவரை ரீமேக் செய்யப்படவில்லை.

இந்நிலையில், பிரபல நடிகரான ஜாவேத் ஜெஃப்ரி தனது மகன் மீஷான் ஜெஃப்ரியை 7ஜி ரெயின்போ காலனியின் இந்தி ரீமேக் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த ரீமேக் படத்தை பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க, மங்கேஷ் ஹடவாலே என்ற இயக்குநர் இயக்கவுள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version