தமிழ்நாடு

இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Published

on

இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்தநிலையில் தீபாவளிக்கு முன்பிருந்தே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version