சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் 7 கோடி ரூபாய் மதிப்பிலான கேரவன் வேன்..!

Published

on

பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் 7 கோடி ரூபாய் மதிப்பிலான கேரவன் வேன் விபத்துக்குள்ளான செய்தி வைரலாகி வருகிறது.

தெலுங்கு பட உலகின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவருக்குச் சொந்தமான ‘ஃபேல்கன்’ எனப் பெயரிடப்பட்ட கேரவன் வேன் 7 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது. தென்னிந்தியாவிலேயே இவ்வளவு வசதிகள் கொண்ட அதிக ரூபாய் மதிப்பிலான கேரவன் வேன் கொண்ட ஒரே நடிகர் ஆக அல்லு அர்ஜுன் உள்ளார்.

ஹைதராபாத்தில் ‘புஷ்பா’ என்னும் படத்தில் சந்தனக் கடத்தல்காரன் ஆக நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வில்லன் ஆக நடிகர் ஆர்யாவும் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பை நிறைவு செய்த அல்லு அர்ஜுன் தனது ஹைதராபாத் வீட்டுக்கு காரில் திரும்பிவிட்டார். ஆனால், அவரது மேக் அப் குழு மற்றும் இதர பணியாளர்கள் அந்த சொகுசு கேரவன் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

திடீரென எதிர்பாரா விதமாக ஃபேல்கன் ஓட்டுநர் ப்ரேக் அடிக்க பின்னல் வந்த கன ரக வாகனம் இந்த கேரவன் மீது மோதியதில் வண்டிக்கு மட்டுமே சேதாரம் ஆகியுள்ளது. உள்ளிருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து குறித்து அப்பகுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version