தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்புகளில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு முடிவு

Published

on

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் கடந்த ஆண்டு முதல் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அரசு பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்று அமைத்தது. தொழிற்கல்வியில் அரசு பல்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து இந்த குழு சமீபத்தில் தமிழக அரசிடம் அறிக்கை வழங்கியது.

அந்த அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இருக்கிறார்கள் என்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் இட ஒதுக்கீடு அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமூக பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 10 சதவிகிதத்திற்குள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழு பரிந்துரை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை அடுத்து அரசு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இட ஒதுக்கீடு காரணமாக இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு பொறியியல் படிப்புகளில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version