தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா?

Published

on

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது.

ஆனால் அதற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளதால், நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர உள் ஒதுக்கீடு கிடைக்காது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற சூழல் உருவான பிறகு, அரசு பள்ளி மாணவர்கள், அதிலும் கிராமப்புறங்களிலிருந்து மருத்துவ படிப்பு கனவுடன் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதை முன்னிறுத்தி கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். எனவே தமிழக அரசு அண்மையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர விண்ணப்பித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் 7.5 சதவீத வழங்கப்படும் என்று சட்டம் இயற்றியது.

தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் ஆளுநர் கையெழுத்திடாமல், இந்த சட்டம் நடைமுறைக்கு வராது. எனவே விரைவில் தமிழக ஆளுநர் இந்த சட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சரியாக வழங்கப்படாமல் சர்ச்சையாகி வரும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீடும் இழுபறியில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version