தமிழ்நாடு

2 டோஸ் தடுப்பூசி போட்ட 66 மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

Published

on

2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட அறுபத்தி ஆறு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியாவில் சுமார் 100 கோடிக்கும் மேல் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தினாலும் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்பு தீவிரமாக இருக்காது என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டுமே 80% கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள எஸ்டிஎம் என்ற மருத்துவ கல்லூரியில் சமீபத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பின்னர் ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததை அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.

அவ்வாறு சோதனை செய்ததில் அதில் 66 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 66 மாணவர்களும் 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறுபத்தி ஆறு மாணவர்களுக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர்கள் டிஸ்சர்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version