தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்கள்: கே.சி.வீரமணி மீது முதல் தகவல் அறிக்கை!

Published

on

முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டுக்கு இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேசி வீரமணி சொந்தமாக திருப்பத்தூரில் உள்ள 15 இடங்கள், சென்னையில் உள்ள 4 இடங்கள் உள்பட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும், ஜோலார்பேட்டை அருகே உள்ள கேசி வீரமணி சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நாட்றம்பள்ளி அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது என்பதும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவி மலை கிராமத்தில் கேசி வீரமணி உறவினர் வீட்டிலும் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் வேலூர் சத்துவாச்சாரி அருகே வசந்தம் நகரில் உள்ள கே சி வீரமணி ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும், ஜோலார்பேட்டையில் உள்ள கேசி வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் திருமண மண்டபத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் சென்னை சாந்தோமில் உள்ள கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கே சி வீரமணி யின் நட்சத்திர ஹோட்டலிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வருமானத்துக்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி அவர்கள் 654 சதவீதம் சொத்துக்களை சேர்த்து இருக்கிறார் என லஞ்ச ஒழிப்பு துறையினர் முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேசி வீரமணி வீட்டில் நடைபெற்று வரும் சோதனைக்கு அதிமுகவினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேசி வீரமணி வீட்டில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனையால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version