தமிழ்நாடு

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னை ஓய்வு பெற்ற ஆசிரியர்!

Published

on

64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீர் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை எழுத அதிகபட்ச வயது நிர்ணயம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 17 வயது நிரம்பிய எவரும் நீட் தேர்வை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையை அடுத்த நாவலூர் என்ற பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு தலைமை ஆசிரியர் முனுசாமி சுப்பிரமணியன் என்பவர் நீட் தேர்வு எழுதி உள்ளார். இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முனுசாமி சுப்பிரமணியன் அவர்கள் 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 64 வயதில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் 3 மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதும் அந்த மூன்று மாணவர்கள் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மிருணாள் குட்டேரி, டெல்லியை சேர்ந்த தன்மய், மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திகா நாயர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் கீதாஞ்சலி என்ற மாணவி 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளார் என்பதும் சேலத்தைச் சேர்ந்த அர்ச்சிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version