இந்தியா

ஒரே நாளில் 60,000 கடந்த கொரோனா பாதிப்பு- அபாய கட்டத்தை நொக்கி தொற்றுப் பரவல்!

Published

on

இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபரில் இருந்து ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 1.19 கோடியை கடந்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 34,86,310 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை 33,663 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதமானது 94.58 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா மூலம் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 1,61,552 ஆக அதிகரித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version