இந்தியா

வயது ஒரு தடையில்லை.. யூடியூபில் சம்பாதித்து முதல் விமானப்பயணம் செய்த 62 வயது பெண்,

Published

on

தெலுங்கானாவைச் சேர்ந்த 62 வயது பெண் ஒருவர் யுடியூப் மூலம் சம்பாதித்து தனது முதல் விமான பயணம் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இளைய தலைமுறை மட்டும் தான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை வயதானவர்கள் கூட முயற்சி செய்தால் சம்பாதித்து மிகப்பெரிய அளவில் பணக்காரர் ஆகலாம் என்பது பல உதாரணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் தெலுங்கானாவில் விவசாயத்தில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் யுடியூப் மூலம் பிரபலமடைந்து தற்போது அவர் மிகப்பெரிய வருமானத்தை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது பெண் விவசாய தொழிலாளி கங்கவ்வா, என்பவர் தெலுங்கானா மாநிலத்தின் கிராமப்புற வாழ்க்கையில் தனது கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் விவசாயத்தில் தினசரி கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் தனது ’மை வில்லேஜ் ஷோ’ என்ற யுடியூப் சேனலை தொடங்கினார்.

யுடியூப் தொடங்குபவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதன் பின் தொடர்ச்சியாக வித்தியாசமான வீடியோக்களை போட்டால் நிச்சயம் அவர்கள் பிரபலம் அடைவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் கங்கவ்வாவ்க்கும் ஆரம்பத்தில் ஒருசில சப்ஸ்கிரைபர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் அவரது வீடியோ மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது.

கிராமப்புற வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கும் அவருடைய வீடியோ வித்தியாசமாக இருந்ததை அடுத்து அவருக்கு ஃபாலோயர்கல் குவிந்தனர் என்பதும் அதனால் வருமானமும் அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பணக்காரர் என்ற இலக்கை அடைவதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை அவர் 62 வயதில் நிரூபணம் செய்து காட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் முதன்முதலாக தான் விமான பயணம் மேற்கொண்ட வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். முதன் முதலில் விமான பயணம் செல்பவருக்கு ஏற்படும் பயம் மற்றும் அச்ச உணர்வுகளை அவர் அந்த வீடியோவில் வெளிப்படுத்தி இருக்கிறார் விமானம் உயரம் உயர பறக்கும் போது அச்சம் அடைந்ததாகவும், விமானத்தின் சத்தம் தனது காதுகளை காயப்படுத்தியதாகவும் கூறிய அவர் ஆனால் அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது என்றும் விண்ணிலிருந்து பூமியை பார்ப்பதற்கு எனக்கு வித்தியாசமாக அனுபவமாக இருந்தது என்றும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது வெற்றிக்கு காரணமே அவர் தெலுங்கு மொழியில் பேச்சு வழக்கில் பேசிய தான் என்பதும் பக்கத்து வீட்டுக்காரர் பேசுவது போல் அவரது வீடியோ இருந்தததை அடுத்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் பிரபலமான அவரை தெலுங்கு திரையுலகமும் விட்டு வைக்கவில்லை . ஒரு சில படங்களில் அவருக்கு வாய்ப்பு அளித்தது என்பதும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும் அதுமட்டுமின்றி தெலுங்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சியிலும் அவர் 19 போட்டியாளர்களில்ஒருவராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version