சினிமா செய்திகள்

61வது கிராமி விருது: 2 விருதுகளை வென்ற லேடி காகா!

Published

on

இசைக் கலைஞர்களுக்கான உச்சபட்ச விருதாக கிராமி விருது கருதப்படுகிறது. 61வது கிராமி விருது இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டாப்லர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பாடகிகள், ஹாலிவுட் நடிகை மற்றும் நடிகர்கள் பல வண்ண உடையில் விருது விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில், சர்ப்ரைஸ் விருந்தாளியாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா கலந்து கொண்டார். 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாக ‘திஸ் இஸ் அமெரிக்கா’ என்ற பாடலுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது. ஆனால், இத்தனை பெரிய விருதினை பெற பாடகர் சைல்டிஸ் கபானாவில் வரமுடியாத காரணம் தான் தெரியவில்லை.

சோலோ பாப் பாடல் மற்றும் குழு பாப் பாடல் உள்ளிட்ட மூன்று விருதுகளையுமே பாடகி லேடிகாகா தட்டிச் சென்றார். அவரும் ஹாலிவுட் நடிகர் பிராட்லி கூப்பரும் இணைந்து பாடிய Shallow பாடலுக்கு கிராமி விருது கிடைத்தது.

இளம் பாடகியான அரியானா கிராண்டே முதன் முதலாக தனது ஸ்வீட்னர் ஆல்பத்திற்காக கிராமி விருது வென்றார்.

மேலும், பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Trending

Exit mobile version