தமிழ்நாடு

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி: மற்றொரு மாணவனுக்கு விட்டு கொடுத்த ஆசிரியர்!

Published

on

61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைக்கவிருந்த எம்பிபிஎஸ் சீட்டை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். 60 வயதில் அவருக்கு அவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றதாக ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் கூறியுள்ளார். தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சிவப்பிரகாசம் நீட் தேர்வில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் இன்று சென்னையில் கலந்தாய்வுக்கு வருகை தந்திருந்தார்.

61 வயதான சிவப்பிரகாசம் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவரிசையில் 249 இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு கிடைக்க இருந்த எம்பிபிஎஸ் இடத்தை மற்றொரு மாணவனுக்கு விட்டுக் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version