சினிமா செய்திகள்

60 கோடி பார்வை; இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி!

Published

on

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் 60 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் – தீ இணைந்து பாடிய பாடல் தான் ரவுடி பேபி. இந்த பாடல் வெளிவந்த நாளில் இருந்தே பட்டி தொட்டிகள் என அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.

அருமையான வரிகள் மூலமாகவும் அனைவரையும் கவரும் நடனத்தின் மூலமாகவும் இந்த பாடல் யூடியூபில் இதுவரை 60 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் பாடல் 60 கோடி பார்வைகளை பெருவது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த பாடல் 100 கோடியை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version