தமிழ்நாடு

6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவது எப்போது? பாடத்திட்டம் குறைக்கப்படுமா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது.

மேலும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்றும், அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி டைந்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதை அடுத்து விரைவில் 6, 7, 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதே நேரத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பிலும் சானிடைசர் வசதி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்புக்கு பின்னர் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version