இந்தியா

ஒமிக்ரான் பரவால் 6 மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு: தமிழகம் தப்பிக்குமா?

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவை கப்பட்ட நிலையில் தமிழகம் ஊரடங்கில் தப்பிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்தியாவில் நாளுக்கு நாள் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாகி வரும் நிலையில் தற்போது வரை இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 400க்கும் அதிகமானோர் தற்போது ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக இரவுநேர ஊரடங்கும் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அது மட்டுமின்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பகலிலும் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் ஊரடங்கு நெறிமுறைகளை கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச மாநிலம் போலவே குஜராத்திலும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த ஊரடங்கு உத்தரவு இன்று இரவு இன்று இரவு முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் திரையரங்குகள், மால்கள், உணவகங்கள், ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிசம்பர் 25 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் அம்மாநிலத்தில் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறினாலும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமானால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version