தமிழ்நாடு

அவனியாபுரத்தில் ராகுலுக்கு பாஜக போர்க்கொடி… ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் பங்கேற்றதால் ‘திணறிய’ போலீஸ்!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண, அவனியாபுரம் வந்தார். தொடர்ந்து அவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை உணர்த்தும் நோக்கில், சமபந்தி உணவையும் மக்களோடு மக்களாக அமர்ந்து சாப்பிட்டார்.

ராகுல் காந்தி, தமிழகத்துக்குப் பொங்கல் கொண்டாட வருகிறார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் நேற்று முன் தினம்தான் கொடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் படு உற்சாகம் அடைந்தனர். இன்று முழுவதும் மதுரையில் பெருந்திரளான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு, ராகுலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் அவனியாபுரம் அருகில், பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6 பேர், ராகுலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வாகனம் வந்த வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுலுக்கு, வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த வெறும் 6 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை எந்த வித சிரமும் இன்றி, அங்கிருந்து அப்புறப்படுத்தியது தமிழக காவல் துறை.

மேலும், எதிர்ப்புத் தெரிவிக்கக் கூட அதிக நபர்களை கூட்ட முடியாத இந்து அமைப்பினரை நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version