தமிழ்நாடு

தீபாவளியின் போது 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடித்தால் என்ன தண்டனை? சென்னை காவல் துறை எச்சரிக்கை!

Published

on

சென்னை: தீபாவளியின் போது உச்ச நீதிமன்றம் நாடு முழுவது 2 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அதில் இருந்து விலக்கு பெற்று காலை 6 முதல் 7 மணி வரையிலும் , மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறினால் என்ன செய்வார்கள் என்று மக்கள் சமுக வலைத்தளங்களில் விமர்சித்து வரும் நிலையில் சென்னை காவல் துறை 2 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பட்டாசுகளை வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை என்ற அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை மட்டும் சுற்று சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகைப் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version