இந்தியா

சிகிச்சைக்காக ரூ.16.50 கோடி நிதி திரட்டப்பட்ட நிலையில் 6 மாத குழந்தை உயிரிழப்பு!

Published

on

6 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16.5 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட நிலையில் அந்த குழந்தை நேற்றிரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஆரிப், ரமீசா தாஸ்னி என்ற தம்பதிக்கு 6 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்த 17 நாட்களில் அந்த குழந்தைக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு என்னும் அரிய நோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு 18 கோடி ரூபாய் தேவைப்பட்டது என்பதால் இதற்காக நிதி திரட்ட பெற்றோர்கள் முடிவு செய்தனர். கேரள மக்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்த மக்களிடம் இருந்து நிதி பெறப்பட்டது. பலர் அந்த குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் நிதி கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த குழந்தைக்கு தேவையான மருந்தை இறக்குமதி செய்ய வரி விலக்கு அளிக்கும்படி பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இந்த குழந்தைக்கு தேவையான மருந்துக்கு வரிவிலக்கு அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் குழந்தையின் சிகிச்சைக்காக 18 கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அதில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டது. இன்னும் ஒன்றரை கோடி திரட்டப்பட்டுவிட்டால் அறுவை சிகிச்சை தொடங்கி விடும் என்ற நிலையில் நேற்றிரவு அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து து குழந்தையின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரளாளே இந்த குழந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version