இந்தியா

எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதா?

Published

on

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி வங்கியின் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்.டி.எப்.சி வங்கியின் சுமார் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் விற்பனைக்கு என விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து வாடிக்கையாளர்களின் தகவல்கள் எதுவும் கசியவில்லை என்று வங்கி விளக்கம் அளித்துள்ளது.

எச்.டி.எப்.சி வங்கியின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் இந்த டேட்டாக்கள் உண்மையானது போல் தெரிகிறது என்றும் வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் எச்.டி.எப்.சி வங்கி தங்கள் வங்கியில் இருந்து டேட்டாக்கள் எதுவும் கசியவில்லை என்றும் எங்கள் அமைப்புகள் எதுவும் ஏறப்படவில்லை என்றும் தங்கள் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் டேட்டாக்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளன.

எங்கள் அமைப்புகளில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் டேட்டா பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்றும் நாங்கள் தொடர்ந்து டேட்டாக்களை பாதுகாப்பதில் செயல்பட்டு வருகிறோம் என்றும் அங்கு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் எச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்களின் முழு பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள் மற்றும் முக்கிய தரவுகள் அடங்கிய தகவல்கள் சைபர் குற்றவாளிகளின் ஹேக்கர் இணையதளத்தில் உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 மார்ச் வரையிலான டேட்டாக்கள் அந்த இணையதளத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வங்கி நிர்வாகம் இதனை உறுதியாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கியின் மொபைல் செயல்பாடு மார்ச் 6ஆம் தேதி அன்று திடீரென செயல் இழந்ததாகவும் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்ததாகவும் இதற்கும் அந்த டேட்டாக்கள் கசிவு செய்திக்கு சம்பந்தம் உள்ளதா என வாடிக்கையாளர்கள் தங்களது டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சமீப காலமாக வங்கியின் குறுஞ்செய்திகள் ஸ்பேமாக அதிகரித்து உள்ளது என்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version