ஆரோக்கியம்
‘டீ’ (தேநீர்) உடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!
![tea - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/07/tea.jpg)
‘டீ’ என பலரும் விரும்பி பருகி வரும் தேநீர் பிரியரா நீங்கள்? (Tea lover?) உங்களுக்கு பிடித்த தேநீருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 6 உணவுகள் இதோ!
எலுமிச்சை (Lemon):
எலுமிச்சை தேநீரில் சுவையைக் கூட்டும் என்றாலும், அதிகமாக சேர்த்துக்கொள்வது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
கீரைகள் (Leafy Greens):
பாலக்கீரை, முள்ளங்கீரை போன்ற இரும்புச்சத்து நிறைந்த கீரைகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. தேநீர் இரும்புச்சத்து சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
சிவப்பு இறைச்சி (Red Meat):
இறைச்சியுடன் தேநீர் குடிப்பது வயிற்றுப்புண் போன்ற செரிமான பிரச்சனைகளை அதிகரிக்கும்.
மசாலா உணவுகள் (Spicy Food):
மசாலா அதிகம் உள்ள உணவுகளுடன் தேநீர் குடிப்பது வயிற்றுக் கோளாறு மற்றும் அஜீரணத்தை உண்டாக்கும். ️
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் (Processed Foods):
கேக், பிஸ்கட் போன்ற சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் தேநீரின் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கும்.
பருப்பு வகைகள் (Legumes):
பயறு, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளும் இரும்புச்சத்து நிறைந்தவை. இவற்றுடன் தேநீர் குடிப்பது இரும்புச்சத்து சத்துபடிவதை பாதிக்கும்.