தமிழ்நாடு

முதல்வரின் முதல் அமைச்சரவை கூட்டம்: எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள்

Published

on

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்தது என்பதும் முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே. முதல்வருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

இந்த நிலையில் முதல்வர் மற்றும் 33 அமைச்சர்கள் கலந்து கொண்ட முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்பின் முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த ஆறு முக்கிய முடிவுகள் பின்வருவன:

1. தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

2. அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும்.

3. மருத்துவ ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

4. எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது.

5. ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

6. அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது.

seithichurul

Trending

Exit mobile version