ஆரோக்கியம்

குளிர் காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளனும் வைத்துக்கொள்ள உதவும் 6 பழங்கள்!

Published

on

குளிர் கலத்தில் என்ன தான் ஸ்வெட்டர் போன்றவற்றை அணிந்து பணியைச் சமாளித்தாலும், அதனால் ஏற்படு சரும பிரச்சனைகள் பல.

குளிட் காலத்தில் சருமம் வரண்டு விடும். முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குளிர்ந்த காற்று, குறைந்த ஈரப்பதம், வறண்ட உட்புற வெப்பம் மற்றும் கடுமையான குளிர்காலம் ஆகியவை சருமத்தின் ஈரப்பதத்தை வறட்சியாக மாற்றிவிடும்.

இருந்தாலும் இந்த குளிர் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளைச் சரியான உணவை எடுத்துக்கொள்ளும் போது தடுக்கலாம். அப்படி குளிர் காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளனும் வைத்துக்கொள்ள உதவும் 6 பழங்கள் பற்றி விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன. இவை குளிர் காலத்தில் வரண்டுவிடும் சருமத்திற்கு ஈரப்பத்தை வழங்க உதவுகின்றன. பப்பாளி சருமத்துக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். அதனால் குளிரை எதிர்த்துப் போராட உதவும்.

மாதுளை பழம்

சருக்கமான சரும தோற்றத்தைக் குறைக்கும். இந்த பழத்தின் சாறு சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி ஈரப்பதமாக்க உதவும்.

அன்னாச்சி பழம்

அன்னாச்சி பழம் சரும செல்களை பாதுகாத்து புற்று நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமைலின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது உடலைச் சூடாக வைத்துக்கொள்ளவும் உதவும். முகப்பரு, பருக்கள், முகப்பரு, தழும்புகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்தி சருமத்தைத் தெளிவாக வைத்துக்கொள்ள உதவும்.

கிவி பழம்

கிவியில் உள்ள எதிர்ப்பு பண்புகள் பருக்கள், தோல் செறி போன்றவற்றை அகற்ற உதவும். கிவியில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி, உறுதியான சருமத்தை உருவாக்க உதவும். இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ மூலமாகச் சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.

வாழை பழம்

வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ளன. இவை பளபளப்பான சருமத்தை மேம்படுத்த உதவும். இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும். இது குளிர்காலத்தில் சரும வறட்சி மற்றும் மந்தமான தன்மையைக் குறைத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.

ஆரஞ்ச்

ஆரஞ்ச் பழத்தில் வைட்டமின் சி நற்குணத்தால் நிரம்பி உள்ளதால் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழங்களை உட்கொள்வது சருமத்தைச் சரிசெய்ய உதவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுகள் சருமத்தின் இளமைப் பொலிவையும், பளபளப்பான தோற்றத்தையும் ஊக்குவிக்கும்.

seithichurul

Trending

Exit mobile version