தமிழ்நாடு

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்: செங்கோட்டையன்

Published

on

நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த பொதுத் தேர்வு நடைமுறை பெறும் அளவில் எதிர்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்ச செங்கோட்டையன், “5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கண்டு மாணவர்கள் பயப்பட வேண்டாம்.

ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வைப் போலவே இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் அணைத்து மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சியைப் பெறுவார்கள்.

மாணவர்களுக்குப் பெற்றோர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், பொதுத்தேர்வு குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்” அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார்.

எனவே பொதுத் தேர்வு நடைபெற்றாலும் எப்போதும் போல அனைத்து மாணவர்களும் அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர்வதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆனால் இதை வைத்து மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு அவர்கள் திறனுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் மாற்றம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.

Trending

Exit mobile version