உலகம்

5ஜி சேவையால் விமான சேவைகள் பாதிப்பு: விமான நிறுவனங்கள் புகார்

Published

on

5ஜி சேவையால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே விமான நிலையங்களின் அருகில் 5ஜி சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க விமான நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

மிகவும் வேகமான இன்டர்நெட் சேவைகளில் ஒன்றான 5ஜி சேவை தற்போது அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதனால் ஏராளமான பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் 5ஜி சேவையால் விமான நிலையங்களில் ஓடுபாதையில் குழப்பம் ஏற்படுவதாகவும் இதனால் விமானங்கள் தரை இறங்குவது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே விமான ஓடு நிலையங்களில் அருகே 5ஜி தொழில்நுட்பத்தின் சிக்னல்கள் விலக்கப்பட வேண்டும் என்றும் விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்தில் 5ஜி தொழில்நுட்பத்தால் விமான சேவை பாதிக்கப்படுவதாகவும் இதனால் விமான பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றுமதி மற்றும் மருந்து விகிதத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பாக விமான ஓடுபாதை அருகே உள்ள 5ஜி சிக்னல்கள் விலக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version