உலகம்

5ஜியே இன்னும் வரலை, அதுக்குள் 5ஜி அட்வான்ஸ் வரப்போகுதாம்!

Published

on

இந்தியா உள்பட இன்னும் ஒரு சில நாடுகளில் 5ஜி தொழில்நுட்பமே இன்னும் வரவில்லை என்ற நிலையில் 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் வர இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியாவில் 4ஜி தொழில் நுட்பம் தான் உள்ளது என்பதும் இந்த தொழில் நுட்பமே வேகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் தற்போது 5ஜி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டுக்குள் 5ஜி கொண்டு வர ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது 5ஜி அட்வான்ஸ் என்ற ஒரு தொழில்நுட்பம் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் என்பது நெட்வொர்க் வேகம் மட்டுமின்றி புதிய அம்சங்களையும் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக வெர்ச்சுவல் சிமுலேஷன் இந்த தொழில்நுட்பம் மூலம் அனுபவிக்கலாம் என்றும் மெட்டாவர்ஸ் மிகப்பெரிய அளவில் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான டூல்ஸ்கள் இந்த தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த 5ஜி அட்வான்ஸ் தொழில்நுட்பம் என்பது 6ஜி தொழில்நுட்பத்தின் அடித்தளமாக இருக்கும் என்றும் இந்த தொழில்நுட்பம் 2024ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version