தமிழ்நாடு

6000ஐ நெருங்கியது தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தினமும் ஆயிரம் பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் நேற்று 5 ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனாவால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,989

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 9,26,816

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,977

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 23

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,886

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,952

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 876,257

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 83,895

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 201,01,836

Trending

Exit mobile version