இந்தியா

இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு இத்தனை ஆயிரமா? அதிர்ச்சி தகவல்

Published

on

தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்துவருகிறது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 59 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் 32 ஆயிரத்து 987 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் 257 பேர் உயிரிழந்தனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

மகாராஷ்டிரா – 35,952

பஞ்சாப் – 2,661

கர்நாடகா – 2,523

சட்டீஸ்கர்- 2,419

கேரளா – 1,989

குஜராத் – 1,961

மத்திய பிரதேசம் – 1,885

தமிழ்நாடு – 1,779

டெல்லி – 1,515

ஹரியானா – 1,053


மார்ச் 13ஆம் தேதியில் இருந்து இன்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

மார்ச் 26: 59,118
மார்ச் 25: 53,476
மார்ச் 24: 47,262
மார்ச் 23: 40,715
மார்ச் 22: 46,951
மார்ச் 21: 43,846
மார்ச் 20: 40,953
மார்ச் 19: 39,726
மார்ச் 18: 35,871
மார்ச் 17: 28,903
மார்ச் 16: 24,492
மார்ச் 15: 26,291
மார்ச் 14: 25,320
மார்ச் 13: 24,882

seithichurul

Trending

Exit mobile version