தமிழ்நாடு

8 வழிச்சாலை வழக்கு உள்பட 5570 வழக்குகள் வாபஸ்: தமிழக அரசின் அரசாணை!

Published

on

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த வாக்குறுதியின் படி சமீபத்தில் எட்டு வழி சாலை உள்பட அனைத்து திட்டங்களுக்கும் எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் நடத்திவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி சற்று முன்னர் எட்டு வழிசாலை, கூடங்குளம், நியூட்ரினோ, சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 5570 வழக்குகள் திரும்பப் பெறுவதற்கான அரசாணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் எட்டு வழி சாலை, மீத்தேன் மற்றும் நியுட்ரினோ ஆகிய திட்டங்களுக்கு எதிராக போராடிய 405 வழக்குகள், சிஏஏ சட்டத்துக்கு எதிராக போராடிய 2682 வழக்குகள், விவசாய சட்டத்திற்கு எதிராக போராடிய 2831 வழக்குகள், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடிய 26 வழக்குகள், மற்றும் கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராடிய 26 வழக்குகள், என மொத்தம் 5570 வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை அடுத்து மேற்கண்ட போராட்டங்கள் நடத்தியவர்கள் திமுக அரசுக்கும், முதல்வருக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version