சினிமா செய்திகள்

’தலைவர் 169’ படத்தின் நாயகி இந்த 55 வயது நடிகையா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 169’ என்ற திரைப்படத்தில் நாயகியாக 55 வயது நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169 திரைப்படத்தில் இளம் நடிகைகளை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டாம் என ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளதாக போற்றப்படுகிறது .

எனவே ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 40 வயது நடிகைகளை தேடும் படலம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது 55 வயதான நதியா என்ற படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .

ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் நதியா ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் 55 வயதாக இருந்தாலும் இன்னும் இளமையுடன் காட்சியளிக்கிறார் என்றும் தெலுங்கு திரையுலகில் இன்னும் ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருவதால் அவரை ஜோடியாக நடிக்க வைக்கலாம் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ரஜினிகாந்த் ஒப்புதல் தந்து விட்டதாகவும் எனவே நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்த் ஜோடியாக நதியா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version