தமிழ்நாடு

புதுவையில் தொடர்ச்சியாக 55 மணி நேர ஊரடங்கு: பொதுமக்கள் பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும், அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரையிலான 55 மணி நேர முழு ஊரடங்கு புதுவையில் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து புதுவையில் சாலையில் எந்தவிதமான போக்குவரத்தும் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே புதுவை அரசு சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முழு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்றாலும் அதை தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதாக இருந்தால் அதற்குரிய ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 55 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மருந்து கடைகள், பால், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கப்படும் என்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் புதுவை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version