தமிழ்நாடு

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்: தென்காசியில் பரபரப்பு!

Published

on

தென்காசி மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 52 மாணவ மாணவிகளுக்கு திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுவதும் ஒரு சில மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மாறாந்தை என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென 22 மாணவ மாணவியர்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் காய்ச்சல் ஏற்பட்ட மாணவ மாணவியருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நேற்றும் 30 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரே பள்ளியில் மொத்தம் 52 மாணவ மாணவிகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசோதனையின் முடிவு வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version