தமிழ்நாடு

திமுகவை அடுத்து வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள்!

Published

on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஓரளவுக்கு முன்னிலை பெற்று வந்த போதிலும் அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் சோகத்துடன் காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சுயேட்சையாக களம் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்று வருவது அரசியல் விமர்சகர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தெரிவிக்கையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 169 விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் என்றும் அதில் 13 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றவர்கள் என்பதும் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி 38 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் மொத்தம் இந்த தேர்தலில் 51 பேர் வெற்றி பெற்று உள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பல வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் திமுகவை அடுத்து மிகப்பெரிய வெற்றியை விஜய் மக்கள் இயக்கம் பெற்றுள்ளது என்றும், இதனை அடுத்து இந்த இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும என்பது குறித்து ஆச்சரியத்துடன் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் கமல்ஹாசன், சீமான், விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் கட்சிகளே இந்த தேர்தல் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் புதிதாக அதிலும் சுயேட்சையாக களம் இறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் பலர் வெற்றி பெற்றுள்ளது அரசியல் அரங்கில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கம் தெரிகிறது என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version