இந்தியா

தினமும் 5000 பக்தர்கள் அனுமதி: சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

Published

on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது

சபரிமலை கோவிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று கோயில் திறக்கப்பட்டது என்பதும் பக்தர்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் தெரிந்ததே. ஐந்து மாதங்களுக்குப் பிறகு சபரிமலையில் கோவிலில் பக்தர்கள் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இன்று முதல் 21-ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 5000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

சபரிமலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகளை கடைபிடித்து சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாதுகாப்புடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி என்ற சபரிமலை தேவஸ்தானத்தின் அறிவிப்பு பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version