இந்தியா

கோடையில் 50 சிறப்பு இரயில்கள்: தெற்கு இரயில்வே அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு இரயில்வே.

சிறப்பு இரயில்கள்

இரயில் பயணிகளின் வசதிக்காக கோடைக் காலத்தில், தெற்கு இரயில்வே 380 சிறப்பு இரயில்களில் 6,369 பயணங்களை இயக்குகிறது. 2022 ஆம் ஆண்டு கோடையில், 348 சிறப்பு இரயில்களில் 4599 பயணங்கள் இயக்கப்பட்டது. இதனோடு ஒப்பிடும் போது, இரயில்வே இந்த ஆண்டு 1,770 முறை கூடுதலான இரயில் பயணங்களை இயக்குகிறது.

அதன்படி, இந்தியாவின் முக்கிய இடங்களான பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், பாட்னா – செகந்திராபாத், டெல்லி – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, புதுடெல்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா மற்றும் மும்பை – கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தெற்கு இரயில்வே

தெற்கு இரயில்வேயில் 50 சிறப்பு இரயில்களின் மூலம் 244 பயணங்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி, தாம்பரம் – நெல்லை, எழும்பூர் – வேளாங்கன்னி, திருவனந்தபுரம் – மங்களூரு, எழும்பூர் – நாகர்கோவில், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் எழும்பூர் – கன்னியாகுமரி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version