இந்தியா

இந்தியாவில் மேலும் 50 சீன செயலிகளுக்கு தடையா? கேம் செயலிகளும் சிக்குவதாக தகவல்

Published

on

இந்தியாவில் ஏற்கனவே 270 சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 50 செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த பல வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பாக லடாக் தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு உறவு மிகவும் பாதிப்படைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 50 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. அதில் டிக் டாக் ஹலோ உள்பட பல முக்கிய செயலிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து அதிரடியாக அதே ஆண்டு 118 செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சீனாவை சேர்ந்த 270 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது மேலும் 50 செயலிகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளுக்கு மாற்றாக வெளிவந்த செயலிகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செயலிகளுக்கு தான் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஐம்பது செயலிகளில் பிரபல கேம் செயலிகளும் அடங்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version