தமிழ்நாடு

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்: தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு

Published

on

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதிக்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல், சிறுநீரகம் உள்ளிட்ட உயர் மருத்துவ படிப்புகளில் படித்த மாணவர்கள், படிப்பை முடித்த பின்னர் இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற விதியை மருத்துவ கல்வி இயக்ககம் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் மேற்கண்ட படிப்புகளை முடித்த மாணவர்கள் கலந்தாய்வின்போது அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என தெரிவித்த மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் தகுந்த காரணம் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விருப்பமில்லை என்று கூறிய மாணவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் அனைத்து மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனராகும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பாத மாணவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version